குலசேகரன்பட்டினம் மேல புது தெரு, முகைதீன் தெரு பகுதியில் புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி அகற்றினர். பின்னர் 10 நாட்களுக்கும் மேலாக சாலை பணிகள் தொடங்கப்படாததால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுகிறேன்.