செஞ்சி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் களையூர் கூட்டுரோடு அருகே உள்ள கால்வாய் குறுக்கே சிறுபாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு மண் மற்றும் கற்கள் குவித்து வைக்கப்பட்டன. ஆனால் அங்கு மேற்கொண்டு பணிகள் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சிறுபாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.