நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் வார சந்தைக்கு அருகில் அரசு கருவூல அலுவலகத்திற்கு எதிரே உள்ள பகுதிநேர நூலகம் பயனற்று சேதமடைந்து உள்ளது. எனவே மாணவ, மாணவிகள், இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த நூலகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.