தர்மபுரி மாவட்டம் திருமல்வாடி அருகே உள்ள அகரம் ஏரியில் கருவேல முள் செடிகள் அதிக அளவில் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பில் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த ஏரி வறண்டுள்ளதால் ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல முள் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.