பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள ஜெயப்பிாியா நகரில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.