விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமான வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் காதுகளை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்களும், போலீசாரும் இதை கண்காணித்து அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.