சங்கராபுரம் முதல் மோட்டாம்பட்டிவரை செல்லும் பிரதான சாலையில் தியாகராஜபுரம் பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வாகனங்கள் அதிவேகமாக வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே அப்பகுதியில் விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.