சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி கட்டிடம்

Update: 2023-06-25 10:41 GMT

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. பள்ளிக்கூடத்தை ஒட்டி அருகாமையில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் அருகாமையில் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள், விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் வந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்