நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை பள்ளியின் எதிரே அமைந்துள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாயின் மதகுகள் துருப்பிடித்து சேதடைந்த நிலையில் இருப்பதாக ஆறுமுகநயினார் என்பவர் அனுப்பிய புகார் பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மதகுகள் அமைக்கப்பட்டன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.