கொட்டாரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தினசரி சுமார் 50 ஆடுகளுக்கு மேல் சாலையில் அங்குமிங்குமாக சுற்றித்திரிகின்றன. இதனால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றுத்திரிக்கின்ற ஆடுகளை தடுப்பதுடன், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா?.
-கிருஷ்ணன், கொட்டாரம்.