நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி ஏரியில் தண்ணீர் இல்லாமல் தற்போது வறண்டு காணப்படுகிறது. பொதுப்பணித்துறையினர் ஏரி பகுதியை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தி மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து வைத்தால் இந்த பகுதியில் உள்ள கிணறுகள் அனைத்திலும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படும். இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும். வீணாக மழைநீர் சாக்கடையில் கலக்காமல் சேமிக்க ஏரியை முறையாக பராமரிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனி, வெண்ணந்தூர்.