தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் தாசில்தார் குடியிருப்பு பங்களா உள்ளது. இந்த தாசில்தார் குடியிருப்பு பங்களா பயன்படுத்தப்படாமல் பூட்டியே உள்ளதால் பங்களா வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மேலும் தாசில்தார் பங்களாவை சுற்றியுள்ள பகுதிகளில் விஷபூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே இந்த பகுதியில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த தாசில்தார் குடியிருப்பு பங்களாவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்தோஷ், நல்லம்பள்ளி.