புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-06-21 16:36 GMT
செஞ்சி அருகே மேல்சேவூர்-கொங்௧ரப்பட்டு செல்லும் வழியில் சங்கராபரணி ஆறு உள்ளது. இதை கடந்து செல்ல ஏதுவாக கட்டப்பட்ட பாலத்தில் உள்ள தூண்களில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, அதன் உறுதித்தன்மையை இழந்து வந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் பாலத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாாிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்