சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-21 16:35 GMT
  • whatsapp icon
விழுப்புரம் சாலாமேடு ஆதிதிராவிட நலத்துறை விடுதி அருகே கோலியனூர் வாய்க்காலை கடந்து செல்ல ஏதுவாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் மாருதி நகர், சர்வேயர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமலும், அங்கிருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமலும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தரைப்பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்