ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-06-21 15:24 GMT

தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்டது அருள்வாடி ஊராட்சி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மேல்நிலை தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பேராபத்து ஏற்படலாம். அதற்கு முன்பு குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்