சென்னை, நெற்குன்றம் பகுதியில் உள்ள தெரு பெயர் பலகைகளில் அத்துமீறி, சுவரொட்டிகள் ஒட்டபட்டு வருகிறது. இதனால், புதிதாக வரும் நபர்கள் வழிதெரியாமல் சுற்றித்திரியும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, அத்துமீறி பெயர்பலகை மீது சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.