பாளையங்கோட்டை யூனியன் செங்குளம் பஞ்சாயத்து கீழ ஓமநல்லூர் மயானத்தில் அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளதாக தேவராஜ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு பழுதடைந்த அடிபம்பு சரி செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.