களக்காடு தம்பிதோப்பு பகுதியில் இருந்து சிவசண்முகபுரத்துக்கு செல்லும் வழியில் ஓடைப்பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஓடையிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் ஓடைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைப்பதுடன், ஓடையில் புதர் செடிகளை அகற்றி தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.