கோைவ மாநகராட்சி 90-வது வார்டு கோவைப்புதூர் பகுதியில் அனுமதியின்றி சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளன. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் காணப்படுகின்றன. இதனால் விபத்து அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.