விக்கிரவாண்டி தாலுகா கெடார் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக வயதானவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.