தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி கிராமத்தில் பட்டுக்கோட்டை-முத்துப்பேட்டை இணைக்கும் சாலையில் கடந்த ஆண்டு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதற்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது வரை அதற்கு மாற்றாக அந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் மீண்டும் புதிதாக மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.