காணாமல்போன பகுதி நேர நூலகம்

Update: 2023-06-18 13:03 GMT

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதியான பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பகுதி நேர நூலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு உள்ள பெரியவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் இந்த நூலகத்தில் தொடர் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டு இங்கு கிடைக்கும் நூல்களையும், அன்றாட செய்தித்தாள்களையும் வாசித்து பயன்பெற்று வந்தனர். தற்போது பல்வேறு காரணங்களால் இப்பகுயில் இயங்கி வந்த பகுதிநேர நூலகம் இல்லாமலே போய்விட்டது. இதற்கான எந்த ஒரு காரணமும் இப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆகவே மிகவும் பயனுள்ளதாக இருந்த பகுதி நேர நூலகத்தினை மீண்டும் அமைத்து அனைத்து நிலை பொதுமக்களும் பயன்பெற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்