சங்கரன்கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தில் உள்ள பொதுக்கிணற்றை தூர்வாருவதற்காக, அதன் தடுப்பு சுவரை இடித்து அகற்றினர். பின்னர் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதால், கிணறு தரைமட்டமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே கிணற்றில் தூர்வாரும் பணியை விரைந்து நிறைவேற்றி, தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.