பூதப்பாண்டியில் ஜீவானந்தம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மகளிர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த இரு பள்ளிகளின் சுற்றுசுவர் அருகே அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஓடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், கழிவுநீர் வடிந்தோட இடையூறு ஏற்பட்டு ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும், பள்ளியின் சுற்றுச்சுவரும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, கழிவுநீர் ஓடையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து பள்ளியின் சுற்றுச்சுவரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாரதி,பூதப்பாண்டி.