கோவளம் கிராமம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், கனரக வாகனங்கள் வரும்போது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, அதிகபாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ததேயுஸ், கோவளம்.