ஓடையில் கொட்டப்படும் மாம்பழங்கள்

Update: 2023-06-14 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி சங்கொலி நிலையம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாங்காய் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து அழுகிய மாம்பழங்கள் அருகில் உள்ள சோமேஸ்வரர் ஓடையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியே சென்று வருவோர் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே அழுகிய மாம்பழங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பை கொட்டும் இடத்திற்கு கொண்டு சென்று கொட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நிவாஸ், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்