சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து செல்வார்கள். இருப்பினும் கோவிலில் தங்கும் பக்தர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு குளியல் அறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே கோவில் வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.