கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் எந்தவொரு சான்று பெற வேண்டுமானாலும் இடைத்தரகர்களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிட்டாவில் பெயர் சேர்த்தல், உட்பிரிவு, பட்டா மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தாசில்தார் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும்.