ரேஷன் கடையை திறப்பதில் தாமதம்

Update: 2023-06-14 09:16 GMT

கோவை அருகே வெள்ளக்கிணறு பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை குறித்த நேரத்துக்கு திறப்பது இல்லை. காலையில் தாமதமாக திறப்பதோடு மாலையில் முன்கூட்டியே அடைத்து விடுகின்றனர். இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து கேட்டால் முறையான பதில் அளிப்பது இல்லை. எனவே குறித்த நேரத்துக்கு ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்