விழுப்புரம் மாவட்டம் பனமலைப்பேட்டை, வெள்ளையாம்பட்டு, பனமலை, அனந்தபுரம், சி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.