பாதுகாப்பற்ற கிணறு

Update: 2023-06-11 13:12 GMT

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே பொது கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கிணற்றில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பொதுக் கிணற்றின் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளதால், பள்ளி மாணவ- மாணவிகள் இந்த கிணற்றை எட்டிப் பார்க்கின்றனர். இதனால் அவர்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிணற்றின் மேல் பகுதியில் மூடி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்