கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2023-06-11 12:31 GMT

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை முதல் கந்தம்பாளையம் வரை கழிவுநீர் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- கொடுமுடி செல்லும் தார் சாலையில் கந்தம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் வரை தார் சாலை விரிவாக்க பணி நடைபெற்று பறிக்கப்பட்ட குழிகளில் ஜல்லிகள் போடப்பட்டுள்ளன. அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் கந்தம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வரை சாலையின் இரு புறமும் கொட்டப்பட்டு நிறவப்பட்டுள்ள சாலை ஓரத்தில் இருபுறமும் பள்ளமாக உள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனத்தை ஜல்லியில் விட்டு கீழே விழுந்து காயமடைந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்