தூத்துக்குடி மச்சாது நகரில் அமைந்துள்ள இந்த மின்கம்பம் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. எந்த நேரமும் கீழே விழக்கூடிய நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தின் அருகே உள்ள சாலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் சென்று வருகிறார்கள். விபரீதம் ஏதேனும் நேரிடுவதற்கு முன்பாக மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தினை மாற்றியமைக்க கேட்டுக் கொள்கிறேன்.