நெல்லை-கோவில்பட்டி சாலையில் உள்ள இராஜாப்புதுக்குடியில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல அரசாணை உள்ளது. ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே நின்று செல்வதால் அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் இன்னலுக்கு ஆளாகிறார்கள். போக்குவரத்து நிர்வாகம் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.