தியாகராஜநகர்- சிவந்திப்பட்டி சாலையில் நான்குவழிச்சாலை உயர்மட்டபாலம் அருகே மழைநீர் வடிகால் வாய்க்கால், சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. அதேபோல் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளின் மேல் எச்சரிக்கை கோடுகள் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் விபத்துக்குள்ளாகிறார்கள். நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வார்களா?