ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கப்படுமா?

Update: 2023-06-11 07:30 GMT

நாங்குநேரி ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடையின் நீளம் அனைத்து ரெயில் பெட்டிகளில் இருந்தும் பயணிகள் இறங்கி, ஏறும் வகையில் இல்லை. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைக்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் படிக்கட்டிகளில் செல்ல இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்