மானூர் ஒன்றியம், கட்டாரங்குளம் பஞ்சாயத்து, இரண்டும் சொல்லான் கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்தொட்டி இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்கிட உதவ கேட்டுக்கொள்கிறேன்.