திங்கள்சந்தை பேரூராட்சிக்குட்பட்ட செட்டியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தர்மசாஸ்தா கோவில் செல்லும் சாலையோரத்தில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் பக்கச்சுவர் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பக்கச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.