தென்காசியில் இருந்து அம்பைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து வழித்தட சேவை தற்போது பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். பல நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் பேருந்திற்காக காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைைமயை சீராக்க கேட்டுக்கொள்கிறேன்.