நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 14-வது வார்டில் பஸ் நிலையம் எதிரில் காட்டூர் விட்டலபுரி ராமர்கோவில் மண்டபத்திற்கு செல்லும் சாலையில் மரம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்ந்து வளர்ந்து உள்ளது. அந்த சாலையில் நடந்து சென்றால் கூட தலையில் முட்டும் அளவிற்கு மரக்கிளை தாழ்வாக உள்ளது. இரவு நேரங்களில் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆபத்தான மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-சித்ராபாபு, குமாரபாளையம்.