பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் வரிசாங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளி சேதமடைந்த காரணத்தால் இடித்துவிட்டு, புதிதாக கட்டப்பட்டது. இருப்பினும் சமையல் கூடத்தை மட்டும் இடித்துவிட்டு, புதிதாக கட்டாமல் அப்படியே போட்டுவிட்டனர். எனவே சமையல் கூடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.