தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கப்படுமா?

Update: 2023-06-04 15:00 GMT
கம்பம் போர்டு ஸ்கூல் தெருவில் நுழைவு பகுதியில் தரைப்பாலம் இருந்தது. அந்த பாலத்தில் மண் மேவியதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைத்து கொண்டது. இதனால் அந்த பாலம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் பாலம் அகற்றப்பட்டு பல மாதங்கள் ஆகியும் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனால் மாணவா்கள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்