ஈரோடு கரூர் ரோட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளிக்கு செல்லும் வழியில் 46 புதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன. வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.