நாங்குநேரி யூனியன் அழகப்பபுரம் யாதவர் தெருவில் ஊர் பொதுக்கிணறு தரைமட்டமாக தடுப்புச்சுவரின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றின் தடுப்புச்சுவரை உயர்த்தி அமைத்து, இரும்பாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.