திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பாவந்தூர் ஊராட்சி மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை சேதமடைந்து எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் ரேஷன் வாங்க வரும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?