நாகை வெளிப்பாளையம் பகுதி காளியம்மன் கோவில் தெருவில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள முதியவர்கள்,குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கொசுக்களின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?