நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து நல்லிபாளையம் பைபாஸ் செல்லும் வழியில் தனியார் பள்ளி அருகே ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த தெருநாய்கள் குழந்தைகள், பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்தில் சிக்கி காயம் ஏற்படும் நிலை உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. குழந்தைகளின் நலன் கருதி தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
-பரமேஸ், கலைவாணர் நகர் நாமக்கல்.