திருவாரூர் மாவட்டம் குடவாசல் காந்தி பூங்கா பின்புறத்தில் கிளைநூலகம் உள்ளது. இந்த நூலகத்துக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. நூலக கட்டிடம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி மற்றும் நூலக கட்டிடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.