தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் குணராமநல்லூர் பஞ்சாயத்து கடப்போகத்தி கிராமத்தில் உள்ள குளத்தின் கரையில் சாலையோரமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் உடைந்து பழுதடைந்து பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் நலன் காக்க வேண்டுகிறேன்.