நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி-அம்பை மெயின் ரோட்டில், கூனியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்களும் நிகழ்கின்றன. மாணவர்களும், பெற்றோர்களும் இந்தச்சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பள்ளி அருகில் எச்சரிக்கை பலகை, வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.